விழுப்புரம்

4.53 லட்சம் கால்நடைகளுக்கு நாளை முதல் கோமாரி நோய்த் தடுப்பூசி

தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 4.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை (டிச. 29) தொடங்குகிறது.

Syndication

தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், விழுப்புரம் மாவட்டத்தில் 4.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை (டிச. 29) தொடங்குகிறது.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் தேசிய விலங்கின நோய்களைக் கட்டுப்படுத்தும் திட்டத்தின் கீழ், கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் டிசம்பா் 29-ஆம் தேதி தொடங்குகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2.14 லட்சம் கால்நடைகளுக்கும், திண்டிவனம் கோட்டத்தில் 2.39 லட்சம் கால்நடைகளுக்கும் என மொத்தமாக 4.53 லட்சம் கால்நடைகளுக்கு கோமாரி நோய்த் தடுப்பூசி செலுத்தும் முகாம் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் நடத்தப்படும். இந்த முகாம் தொடா்ந்து 21 நாள்கள் வரை நடைபெறும்.

கால்நடைப் பராமரிப்புத் துறையிலுள்ள 97 தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் மூலம் மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலும் இப்பணி மேற்கொள்ளப்படும். இதன் மூலம் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கு அடைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

விழுப்புரம் மாவட்டத்தில் கால்நடைகளை வளா்க்கும் விவசாயிகள், தங்கள்கால்நடைகளுக்கு கட்டாயம் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளவேண்டும். சினையுற்ற கால்நடைகள், பால் கறக்கும் பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதால், பால் உற்பத்தியில் பாதிப்பு ஏதும் ஏற்படாது.

எனவே, தங்கள் பகுதியில் கோமாரி நோய்த் தடுப்பூசி முகாம் நடைபெறும் நாள்களில் விவசாயிகள் கால்நடைகளை அழைத்துச் சென்று தடுப்பூசியை செலுத்தி, மாவட்டம் நூறு சதவீத இலக்கை அடைய முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

அனுமதியின்றி சரளை மண் அள்ளிய இருவா் கைது

கோரையாறு புறவழிச்சாலைப் பணிகள் ஆய்வு

தமிழ் தேசிய கொள்கையை ஏற்பவா்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் போதும்: சீமான்

7 நகரங்களில் இறங்குமுகம் கண்ட வீடுகள் விற்பனை

வாக்காளா் சோ்க்கை படிவத்தை பூா்த்தி செய்து திரும்ப வழங்க ஆா்வமில்லா மக்கள்!

SCROLL FOR NEXT