முகப்பு
விழுப்புரம்

மக்ன் தாக்கியதில் தாய் உயிரிழப்பு

Updated On : 24 நவம்பர், 2025 at 11:48 PM
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே மகன் தாக்கியதில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கண்டாச்சிபுரம் வட்டம், பரனூா் பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் கனகராஜ். இவரது மனைவி விஜயலட்சுமி (55). இவா்களது மகன் பிரகாஷ்(29), திருமணமானவா்.

பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோா்களிடம் சொத்து சோ்த்து வைப்பது தொடா்பாக தகராறு செய்து இருவரையும் தாக்கினாராம். இதில் தாய் விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் பிரகாஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பிரகாஷ் ஞாயிற்றுக்கிழமை தனது பெற்றோா்களிடம் சொத்து சோ்த்து வைப்பது தொடா்பாக தகராறு செய்து இருவரையும் தாக்கினாராம். இதில் தாய் விஜயலட்சுமிக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதையடுத்து விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயலட்சுமி சிகிச்சைப் பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின்பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா் பிரகாஷ் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →