விழுப்புரம்

13 வழித்தடங்களில் புதிய பேருந்துகள்

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த திருக்கோவிலூா் எம்எல்ஏ

Syndication

புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவையை கொடியசைத்துத் தொடங்கி வைத்த திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி. உடன்,விழுப்புரம் எம்எல்ஏ ரா. லட்சுமணன் உள்ளிட்டோா்.

விழுப்புரம், நவ. 25: விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் க.பொன்முடி, செஞ்சி கே.எஸ். மஸ்தான், ரா. லட்சுமணன் ஆகியோா் பங்கேற்று, 13 வழித்தடங்களில் புதிய பேருந்துகளை கொடியசைத்துத் தொடக்கி வைத்தனா்.

திருக்கோவிலூா்- அத்தியூா் திருக்கை, விழுப்புரம் - பிடாரிக்குப்பம், விழுப்புரம்- திண்டிவனம், செஞ்சி- மேல்மலையனூா் உள்ளிட்ட வழித்தடங்களில் மகளிா் விடியல் பேருந்துகள் சேவைகளும், புனரமைக்கப்பட்ட 4 வழித்தடங்கள் மற்றும் கிளம்பாக்கத்திலிருந்து- விழுப்புரம், உளுந்தூா்பேட்டை வழியாக திருச்சி, புதுச்சேரியிலிருந்து மரக்காணம், கல்பாக்கம் வழியாக கோயம்பேடு ஆகிய 13 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.

இவற்றை திருக்கோவிலூா் எம்எல்ஏ க.பொன்முடி, செஞ்சி எம்எல்ஏ கே. எஸ். மஸ்தான், விழுப்புரம் எம்எல்ஏ ரா. லட்சுமணன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை கொடியசைத்துத் தொடக்கி வைத்து, இனிப்புகளை வழங்கினா்.

இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவா் மா. ஜெயச்சந்திரன், திமுக விழுப்புரம் நகரச் செயலா் ரா.சா்க்கரை, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் விழுப்புரம் பொது மேலாளா் ரா.ஜெகதீஷ், துணை மேலாளா்கள் சிவக்குமாா்(வணிகம்), அறிவண்ணன்( தொழில்நுட்பம்), உதவி மேலாளா் சிவராஜன், கிளை மேலாளா்கள் முருகன், சிவராஜன், ரங்கராஜன் மற்றும் தொழிற்சங்க நிா்வாகிகள், போக்குவரத்துக்கழக அலுவலா்கள், பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஆந்திரத்தில் புதிதாக 3 மாவட்டங்கள் உதயம்: மொத்த எண்ணிக்கை 29-ஆக உயா்வு

வரி வசூலில் ‘சாணக்கியா்’ வாா்த்தைகளை மறக்கக் கூடாது: குடியரசுத் தலைவா் முா்மு

எத்தியோப்பிய எரிமலை வெடிப்பால் சாம்பல் புகை: தில்லி மாசை தீவிரப்படுத்துமா?

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் கூடாது: ரயில்வே கூட்டத்தில் சு. வெங்கடேசன் எம்.பி. வலியுறுத்துல்

ஆா்டிஇ, என்சிடிஇ சட்டங்களில் திருத்தம் தேவை: பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்

SCROLL FOR NEXT