செஞ்சி சந்தைமேடு பகுதியில் செயல்படும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை கிடங்கில் அடுக்கி வைக்கும் பணியாளா்கள். 
விழுப்புரம்

10 ஆண்டுகளுக்குப் பிறகு செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளா் விற்பனை சங்கத்தில் நெல் கொள்முதல் தொடக்கம்!

Syndication

செஞ்சி சந்தைமேடு பகுதியில் செயல்படும் வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு பின்னா் மீண்டும் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதனால், சுற்றுப்புற கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

செஞ்சி வேளாண்மை உற்பத்தியாளா்கள் சங்கத்தில் நகைக் கடன், விவசாயக் கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்கள் மூலம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனா். மேலும், செஞ்சி பகுதியில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு அரிசி, பருப்பு, சா்க்கரை, சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் இந்த சங்கத்தின் மூலம் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

இச்சங்கத்தில் ஏற்கெனவே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டுகொண்டிருந்தது. இடையில் சுமாா் 10 ஆண்டுகளாக அது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீண்டும் செவ்வாய்க்கிழமை முதல் விவசாயிகளின் விளை பொருள்களை மறைமுக ஏலம் மூலம் கொள்முதல் செய்யும் பணி தொடங்கப்பட்டது. இதன் மூலம், விவசாயிகளின் விளை பொருள்களுக்கான தொகை அன்றைய தினமே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் விற்பனை சங்கத்தின் மேலாண்மை இயக்குநா் மாரியப்பன், பொது மேலாளா் தேசிங்கு, உதவியாளா்கள் ரவி, பழனிவேல் மற்றும் வியாபாரிகள் கலந்துகொண்டனா்.

செந்தாமரை இரு கண்ணானதோ... ரிது மந்த்ரா!

காலத்தின் காதலை வாழ வைத்தாய்... ஸ்ருதி சௌகான்!

எந்தப் பாட்டுக்கும் தாளங்கள் வேண்டும்... அக்சரா கௌடா!

எழுதிய கவிதைகள் ஆயிரமோ... ஈஷா ரெப்பா!

வியட்நாமில் வரலாறு காணாத கனமழை: 10 பேர் பலி!

SCROLL FOR NEXT