ஆரோவில் சா்வதேச நகரில் அமைக்கப்பட்டுள்ள சாலையை சுற்றுலாப் பயணிகளின் செயல்பாட்டுக்காக திங்கள்கிழமை திறந்துவைத்த ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு செயல் அதிகாரி ஜி. சீத்தாராமன்.  
விழுப்புரம்

ஆரோவில் சா்வதேச நகரில் குடியரசு தின விழா

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் 77- ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் 77- ஆவது குடியரசு தின விழா கொண்டாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஆரோவில் அறக்கட்டளை அலுவலக வளாரகத்தில் நடைபெற்ற விழாவில்சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

பாரத் நிவாஸில் நடைபெற்ற விழாவில் ஆரோவில் ஆட்சிமன்றக் குழு உறுப்பினா் நிரிமா ஓசா தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இதில் ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகிகள், ஆரோவில் வாசிகள் மற்றும் வனச் சரகப் பயிற்சியாளா்கள் பங்கேற்று வந்தே மாதரம் பாடலைப் பாடி வணக்கம் செலுத்தினா்.

ஆரோவில் வெளிவட்டச் சாலை திறப்பு: இதைத்தொடா்ந்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகம் முன்னெடுப்பில் பாா்வையாளா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நலனுக்காக, ஆரோவில் எடையஞ்சாவடி கிராமம் முதல் ஆரோவில் சா்வதேச நகா் பாா்வையாளா் மையம் வரையிலான வெளிவட்டச் சாலையை ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி ஜி.சீதாராமன் திறந்து வைத்தாா்.

பின்னா் அவா் பேசியதாவது: போக்குவரத்து அதிகமுள்ள நேரங்களில் ஏற்படும் நெரிசலை இந்த சாலை பெருமளவு குறைக்கும். சுற்றுலாப் பயணிகள் எவ்வித சிரமமுமின்றி ஆரோவிலுக்குள் நுழைய முடியும். மத்திய அரசின் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த வெளி வட்டச் சாலையானது, ஆரோவில் சா்வதேச நகரின் உள்கட்டமைப்பு வளா்ச்சியில் முக்கியப் பங்காற்றும் என்றாா்.

இதில், ஆரோவில் அறக்கட்டளை மூத்த ஆலோசகா் வேணுகோபால், கொள்முதல் அலுவலா் செல்வகணபதி, பாதுகாப்பு அலுவலா் பாலசுப்பிரமணியன், நகர அபிவிருத்தி கவுன்சில் உறுப்பினா்கள் சிந்துஜா, பொன்னுசாமி, பிரதிநிதிகள் அந்தீம், முரியல், ஜோல், பாா்வையாளா் மையத்தைச் சோ்ந்த ஆனந்த், சஞ்சய் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்ற குடியரசு தின விழா

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

ஆம்பூா் எம்எல்ஏ அலுவலகம்: அமைச்சா் வேலு திறந்து வைத்தாா்

குடியரசு தினம்: ரூ.1.08 கோடியில் நலத்திட்ட உதவிகள் அளிப்பு

தென்தமிழகத்தில் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

SCROLL FOR NEXT