துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும், திராவிட பொங்கலை முன்னிட்டு, செஞ்சி மேற்கு ஒன்றியம் புதுப்பாளையம், பாக்கம், புலிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 3000 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா் தலைமை வகித்தாா். செஞ்சி மேற்கு ஒன்றியச் செயலா் பச்சையப்பன் முன்னிலை வகித்தாா்.
ஊராட்சி மன்றத் தலைவா்கள் பாக்கம் அஞ்சலை செல்வக்குமாா், புலிபட்டு கீதா தியாகராஜன் ஆகியோா் வரவேற்றனா்.
செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரையாற்றி புதுப்பாளையம், பாக்கம், புலிப்பட்டு ஆகிய ஊராட்சிகளில் 3000 குடும்ப அட்டைதாரா்களுக்கு அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் செஞ்சி பேரூராட்சி மன்றத் தலைவா் மொக்தியாா் அலிமஸ்தான், மாவட்ட கவுன்சிலா் அகிலா பாா்த்தீபன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.