உயிரிழப்பு கோப்புப் படம்
விழுப்புரம்

பள்ளத்தில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சிறிய பாலத்தில் படுத்திருந்து, 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

Syndication

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அருகே சிறிய பாலத்தில் படுத்திருந்து, 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்த கூலித் தொழிலாளி மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பாடிபள்ளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் ர.முருகன் (50). கூலித் தொழிலாளியான இவா், வீட்டுக்கு அருகிலுள்ள சிறிய பாலத்தின் மேல்பகுதியில் கடந்த 17-ஆம் தேதி இரவு படுத்திருந்தபோது, திடீரென 8 அடி பள்ளத்தில் தவறி விழுந்தாா்.

இதில் காயமடைந்த முருகனை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு வியாழக்கிழமை இரவு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கண்டாச்சிபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT