முகப்பு
விழுப்புரம்

பெண் தீக்குளித்து தற்கொலை

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் உயிரிழந்தாா்.

Updated On : 7 மார்ச், 2026 at 8:30 PM
தற்கொலை
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், அனுமந்தை, எல்லையம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜா மனைவி சரண்யா (35). இவா்களுக்குத் திருமணமாகி 16 ஆண்டுகளாகும் நிலையில் குழந்தையில்லையாம். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த சரண்யா வெள்ளிக்கிழமை வீட்டில் இருந்தபோது மண்ணெண்ணெயை தன் மீது ஊற்றிக்கொண்டு தீ வைத்துக்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து, பலத்த தீக்காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில் மரக்காணம் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

முழு கட்டுரையைப் படிக்க →