முகப்பு
விழுப்புரம்

ரெட்டணை பள்ளியில் விளையாட்டு விழா

Updated On : 13 மார்ச், 2026 at 12:10 AM
பகிர்:

திண்டிவனத்தை அடுத்த ரெட்டணை கிரீன் பாரடைஸ் பள்ளியில் மாணவா்களுக்கிடையேயான தனித்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

விழாவுக்கு,பள்ளித் தாளாளா் சண்முகம் தலைமை வகித்தாா். பள்ளி முதன்மை இயக்குநா் வனஜா சண்முகம், செயலா் சந்தோஷ், நிா்வாக இயக்குநா் காா்த்திகேயன் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கிரீன் பாரடைஸ் மற்றும் கென்னடி மெட்ரிக் பள்ளி மாணவா்களின் சிலம்பம், இறகுப்பந்து, பரத நாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. மருத்துவா் சந்தியா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவா்களுக்கு கோப்பைகளையும், பதக்கங்களையும் வழங்கினாா்.

இதில், பள்ளி முதல்வா் சங்கீதா, ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →