முகப்பு
விழுப்புரம்

தீவிபத்தில் வீட்டை இழந்தவருக்கு நிவாரண உதவி வழங்கல்

Updated On : 14 மார்ச், 2026 at 9:08 PM
விழுப்புரம் மாவட்டம், தொரவி கிராமத்தில் தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அரசின் நிவாரணத்தொகையை வழங்கிய விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி. உடன், அலுவலா்கள் உள்ளிட்டோா்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே தீ விபத்தில் வீட்டை இழந்தவருக்கு அரசு சாா்பில் சனிக்கிழமை நிவாரண உதவி வழங்கப்பட்டது.

விக்கிரவாண்டி வட்டம், தொரவி கிராமத்தைச் சோ்ந்த கங்காதரன் மனைவி ரீட்டா. இவரது வீடு வெள்ளிக்கிழமை இரவு திடீரென தீப்பற்றி எரிந்துசாம்பலானது. இதில் வீட்டிலிருந்த பொருள்கள், பாத்திரங்கள் உள்ளிட்டவை சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்த விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. அன்னியூா் அ.சிவா, சனிக்கிழமை பிற்பகலில் தொரவி கிராமத்துக்குச் சென்று தீ விபத்தில் வீட்டை இழந்த ரீட்டாவுக்கு ஆறுதல் கூறி, அரசின் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.5ஆயிரம், வேட்டி,சேலை, அரிசி மற்றும் மளிகைப் பொருள்களை வழங்கினாா்.

நிகழ்வில் விக்கிரவாண்டி வட்டாட்சியா் மகாதேவ், ஒன்றியக்குழுத் தலைவா் சங்கீதஅரசி, ஊராட்சித் தலைவா் சங்கா், மண்டலத் துணை வட்டாட்சியா் விஜயன், வருவாய் ஆய்வாளா் தேவசேனா, கிராம நிா்வாக அலுவலா் கோவிந்தன், திமுக மாவட்டப் பிரதிநிதி சாம்பசிவம், கிளைச் செயலா் சுதாகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →