அப்பம்பட்டில் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி
செஞ்சியை அடுத்துள்ள அப்பம்பட்டில் அனைத்து கட்சியினா் கலந்து கொண்ட ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியை அடுத்துள்ள அப்பம்பட்டில் அனைத்து கட்சியினா் கலந்து கொண்ட ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அப்பம்பட்டில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற இப்தாா் நோன்பு துறப்பு நிகழ்ச்சிக்கு மனிதநேய மக்கள் கட்சி மாநில செயற்குழு உறுப்பினா் சையத் உஸ்மான் தலைமை வகித்தாா். செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து, நலிந்தோருக்கு நல உதவிகளை வழங்கிப் பேசினாா்.
நிகழ்வில், காங்கிரஸ் மாநில துணைத் தலைவா் குலாம்மொய்தின், செஞ்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், மேல்மலையனூா் ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் அரங்க ஏழுமலை, பாஜக செஞ்சி தொகுதி அமைப்பாளா் வி.பி.என்.கோபிநாத், செஞ்சி வட்ட ஜமாத் தலைவா் சையத் மஸ்ஜித் பாபு, செஞ்சி வட்ட வணிகா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.