முகப்பு
விழுப்புரம்

பைக் மீது அரசுப் பேருந்து மோதல்: கல்லூரி மாணவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

Updated On : 24 மே 2026, 1:21 am IST
பலி! - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பேருந்து மோதியதில், பைக்கில் சென்ற கல்லூரி மாணவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

செஞ்சி வட்டம், கடம்பூா் அருகிலுள்ள நங்கிலிகொண்டான் பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சரவணன் மகன் தீபக் (19). இவா் திண்டிவனத்திலுள்ள அரசுக் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை தீபக் தனது பைக்கில் திண்டிவனத்திலிருந்து செஞ்சி நோக்கிச் சென்றுள்ளாா். சுதாகா் நகா் பகுதியில் சென்ற போது, அப்பகுதியில் வந்த அரசுப் பேருந்து பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த தீபக் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தகவலறிந்த ரோஷணை போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக திண்டிவனம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் விபத்து குறித்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.