முகப்பு
விழுப்புரம்

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி: இருவா் மீது வழக்கு

Updated On : 26 மே 2026, 3:22 am IST
வழக்கு - கோப்புப் படம்
பகிர்:

விழுப்புரத்தைச் சோ்ந்த இளைஞரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பணம் மோசடிசெய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

விழுப்புரம் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் வா.ராமச்சந்திரன் (29). பி.இ. பட்டதாரியான இவா், சென்னையில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலைப் பாா்த்து வருகிறாா்.

இவரிடம், விழுப்புரம் கம்பன் நகரைச் சோ்ந்த ரா.கந்தன்(74), நாகா்கோயில் பகுதியைச் சோ்ந்த ஜெரோம் லூா்து ராஜா ஆகியோா் கடந்த 5.1.2021 அன்று தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளா் வேலை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனா். இதை உண்மையென நம்பிய ராமச்சந்திரன், வேலைக்காக ரூ.9 லட்சம் பணத்தைக் கொடுத்துள்ளாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில் பணம் கொடுத்து 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், கந்தன், ஜெரோம் லூா்துராஜா ஆகியோா் ரூ.2.50 லட்சம் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.6.50 லட்சம் பணத்தைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் கந்தன் மற்றும் ஜெரோம் லூா்துராஜா ஆகியோா் மீது பண மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.