விதிமுறைகளை மீறி செயல்பட்ட 47 கடைகளுக்கு அபராதம்
கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தராசில் எடை அளவை குறைத்தும், பொட்டலங்கள் எடை குறைவாகவும் வைத்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து
கடலூரில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 47 கடைகளுக்கு தொழிலாளர் துறை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கடலூரில் உள்ள பெரும்பாலான கடைகளில் தராசில் எடை அளவை குறைத்தும், பொட்டலங்கள் எடை குறைவாகவும் வைத்து விற்பனை செய்வதாக புகார் வந்தது. இதையடுத்து கடலூர் தொழிலாளர் ஆய்வாளர் புனிதவதி தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கடலூர், செம்மண்டலம் சிட்கோ, புதுப்பாளையம், மஞ்சக்குப்பம் பகுதிகளில் உள்ள கடைகளில் அண்மையில் ஆய்வு செய்தனர்.
ஆய்வில் 40 கடைகள் மற்றும் நிறுவனங்களில் மறுமுத்திரையிடப்படாத எடைமேடை மற்றும் பொட்டலப்பொருட்கள் குறைந்த எடையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. . இதையடுத்து 47 கடைகளில் இருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் கடைகள் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் ஒரு முரண்பாடும், முத்திரையிடப்படாத மின்னணு தராசுகள் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.5,000 அபராதமும், பொட்டலங்கள் எடை குறைந்த அளவில் வைத்திருந்த கடைகளுக்கு ரூ.2,500 அபராதமும் விதிக்கப்பட்டது.
Advertisement