கடலூர்

மருத்துவக்காப்பீட்டு திட்ட அடையாள அட்டை ஆன்லைன் மூலம் வழங்கும் திட்டம் துவக்கம்

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வசதி கிடைப்பதற்காக விரிவான காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. குடும்ப ஆண்டு வருமானம் 72

VASUDEVAN.K

மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ஆன்லைன் மூலம் அடையாள அட்டை வழங்கும் திட்டம் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை வசதி கிடைப்பதற்காக விரிவான காப்பீட்டு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. குடும்ப ஆண்டு வருமானம் 72 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக உள்ள குடும்பங்கள் இத்திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை பெறலாம்.இதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4 ஆண்டுகளுக்கு 4 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் சில சிகிச்சைகளுக்கு 1½ லட்சம் ரூபாய் வரையிலும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கிராம முன்சீப்கள், விடுதலை போராட்ட தியாகிகள், போக்குவரத்துக்கழக பணியாளர்கள், பால் உற்பத்தியாளர் சங்க பணியாளர்கள், செய்தி ஊடக பணியாளர்கள், அரசு உதவித்தொகை பெறும் முதியோர்கள், விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், உழவர் பாதுகாப்புத்திட்ட உறுப்பினர்கள், இலங்கை அகதிகள், ஏழை, எளிய, நலிந்த குடும்பங்களைச்சேர்ந்தவர்கள் குடும்ப அட்டை இல்லாவிட்டாலும் இத்திட்டத்தில் சிகிச்சை பெற தகுதியுடையவர்களாவார்கள்.கடலூர் மாவட்டத்தைச்சேர்ந்த பயனாளிகள் இம்மாவட்டத்தில் உள்ள 20 மருத்துவமனைகளிலும் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இத்திட்டத்தின் மூலம் கடலூர் மாவட்டத்தில் 4 லட்சத்து 99 ஆயிரத்து 123 பேருக்கு மருத்துவ காப்பீட்டு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இதுவரை மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை பெறாதவர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டை வழங்குதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு அலுவலகம் செயல்படுகிறது. இந்த அலுவலகத்துக்கு நேரில் வந்து புகைப்படம் எடுக்கும் பயனாளிகளுக்கு உடனடியாக ஆன்லைன் மூலம் அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

இத்திட்டம் குறித்த தகவல்களை அறிய 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதியும் செயல்படுகிறது. எனவே பொதுமக்கள் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Sunil Gavaskar அறிவுரையைக் கேட்பாரா Abhishek Sharma? | T20 World Cup Review

மின்சாரத் தேவையைத் தொடர்ந்து நிலக்கரித் தேவை அதிகரிக்கும்!

விரைவில் Dragon 2? PR கொடுத்த Update! | Cinema Updates | Dinamani Talkies

இந்திய அணிக்கு இதுதான் சரியான பிளேயிங் லெவன் | T20 World Cup Review

தோ்தல் வந்துவிட்டால் பாஜக 'சோதனை' என்று சிபிஐயை பயன்படுத்தும்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT