கடலூர்

பேரவை குழு ஆய்வு: 89 மனுக்கள் மீது உடனடி தீர்வு

தினமணி

தமிழ்நாடு சட்டப்பேரவை மனுக்கள் குழு கடலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டது. கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட 89 மனுக்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தலைமைக்கொறடாவும், தமிழ்நாடு சட்டபேரவை மனுக்கள் குழுவின் தலைவருமான ஆர்.மனோகரன் தெரிவித்தார்.

அவரது தலைமையில், சட்டப்பேரவை மனுக்கள் குழு உறுப்பினர்கள்,  பா.கணேசன்(உத்தரமேரூர்), ஆர்.என்.கிட்டுசாமி (மொடக்குறிச்சி), கே.பொன்னுசாமி (தாராபுரம்), வெ.பொன்னுபாண்டி (ஸ்ரீவில்லிபுத்தூர்), ஆ.ராமசாமி (நிலக்கோட்டை) ஆகியோர் முன்னிலையில், பல்வேறு துறைகள் குறித்து பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் தொடர்பாக ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு மேற்கொண்டனர்.

இக்கூட்டத்தில் ஆர்.மனோகரன் பேசியது: கடலூர் மாவட்டத்தில் இந்த குழுவிடம் 89  மனுக்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். தமிழக முதல்வர் அறிவித்து செயல்படுத்தி வரும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யவே இந்த ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்படுகிறது.  முதல்வர் அறிவித்த திட்டங்கள் மக்களுக்கு உடனுக்குடன் கிடைத்திட, அரசு அலுவலர்கள் ஏணியாக இருந்து பணியாற்றவேண்டும் என்றார்.

 முன்னதாக குழுவினர், கடலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ரூ.2.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடத்தை ஆய்வு செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.

 மாவட்ட ஆட்சியர் ரா.கிர்லோஷ்குமார், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத் தலைவர் ஆ.அருண்மொழித்தேவன், எம்எல்ஏக்கள் செல்வி ராமஜெயம், சொரத்தூர் ராஜேந்திரன், எம்பிஎஸ்.சிவசுப்பிரமணியன், நா.முருகுமாறன், தமிழ்அழகன், எஸ்பி ஆ.ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT