காமன்வெல் மாநாட்டில் பங்கேற்கூடாது: சிதம்பரத்தில் தமிழ்த் தேச மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும்
இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் நாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது எனவும், தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்ற வலியுறுத்தியும் சிதம்பரம் காந்திசிலை அருகே தமிழ்த் தேச மக்கள் கட்சியினர் ஆர்பட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் த.தாயநிதி தலைமை வகித்தார். கடலூர் ஒன்றிய பொறுப்பாளர் வைரக்கண்ணு, வடலூர் நகர பொறுப்பாளர் ராமமூர்த்தி, குமராட்சி ஒன்றிய பொறுப்பாளர் ம.பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் தமிழரசன்,
தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச்செயலாளர் ஆ.குபேரன், தமிழர்கழகம் பருதிவாணன், பகுத்தறிவு மீட்பு இயக்கம் மு.ர.பேரறிவாளன், ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க நாகை மாவட்டச் செயலாளர் விடுதலைச் செல்வன், தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி செந்தமிழ்க்குமரன், தமிழக இளைஞர் இயக்கம் இனியன், உலக் தமிழ் கழகம் தலைமையகத் துணைத் தலைவர் கதிர்முத்தையன், தமிழ்த் தேசிய மக்கள் கட்சி மையக்குழு உறுப்பினர் தமிழ்நேயன் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். நகர பொருளாளர் அ.ஜெயசேகர் நன்றி கூறினார்.