முகப்பு
கடலூர்

மழை பொழிய கடல்வாழ் மிதவை உயிரினங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது: பேராசிரியர் க.கதிரேசன்

"மழை பொழிய, கடலில் உள்ள மிதவை உயிரினங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மிதவை உயிரினங்கள் இல்லையெனில் இப்பூமியில் வாழ்க்கை இல்லை" என அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல்

Updated On : 5 ஜனவரி, 2024 at 4:42 AM
பகிர்:

"மழை பொழிய, கடலில் உள்ள மிதவை உயிரினங்களுக்கு முக்கிய பங்கு உள்ளது. மிதவை உயிரினங்கள் இல்லையெனில் இப்பூமியில் வாழ்க்கை இல்லை" என அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் க.கதிரேசன் தெரிவித்தார்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல்வாழ் உயிரின உயராய்வு மையம் மற்றும் கடல் அறிவியல் புலத்தில் "கடல்வாழ் மிதவை உயிரினங்களின் பல்லுயிரினம் பற்றிய பயிற்சி திட்டம்" அண்மையில் தொடங்கப்பட்டது. இப்பயிற்சி திட்டத்தை கடல்அறிவியல் புல முதல்வர் பேராசிரியர் க.கதிரேசன் தலைமை வகித்துப் பேசினார். அவர் பேசுகையில் 'கடல்வாழ் மிதவை உயிரிகள் பல்வேறு நன்மைகளை நமக்கு தருகிறது. குறிப்பாக மிதவை உயிரினங்கள் டை மீதைல் சல்பைடு உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது' என குறிப்பிட்டார்.

பல்கலைக்கழக புவி அறிவியல் துறை தலைவர் முனைவர் தி.ராம்குமார் பயிற்சி திட்டத்தினை தொடங்கி வைத்துப் பேசினார். ஒருங்கிணைப்பாளர் பி.சம்பத்குமார் வரவேற்றார். முனைவர் வெ.அசோக்பிரபு நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.