கடலூர்

விதைப் பண்ணை வயல்களில் வேளாண் துறை ஆணையர் ஆய்வு

தினமணி

குறிஞ்சிப்பாடி வட்டம், செல்லங்குப்பம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள விதைப் பண்ணை வயல்களை வேளாண் துறை மாநில ஆணையர் தட்சிணாமூர்த்தி அண்மையில் ஆய்வு செய்தார்.
 தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் பயறு திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் உயர் விளைச்சல் ரகங்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் மானியத்தில் ஙஈம-1, யஆச-5 விதைகள் பெற்று விதைப் பண்ணைகள் அமைத்துள்ள வீரமணி, சிவமணி, புனிதா ஆகியோரது பண்ணை வயல்களை ஆய்வு செய்தார். சாகுபடி செய்யும் நிலத்தில் காற்றிலிருந்து தழைச் சத்தினை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தும் உளுந்து பயிரை நடப்பு பயிராண்டில் அதிக பரப்பளவில் பயிரிட வேண்டும் என விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.
 மேலும், தெளிப்பு நீர்ப் பாசனக் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், பேய்க்காநத்தம் கிராம விவசாயி வீரமணிக்கு ரூ.1,14,600 மானியத்தில் பாசனக் கருவியை ஆணையர் வழங்கி திட்டத்தை தொடக்கி வைத்தார்.
 நிகழ்வில், சென்னை அலுவலக கூடுதல் இயக்குநர் நெடுஞ்செழியன், கடலூர் வேளாண்மை இணை இயக்குநர் மனோகரன், வேளாண்மை துணை இயக்குநர் சம்பத்குமார், கனகசபை, விதைச் சான்று உதவி இயக்குநர் பிரேமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குநர் ஏழுமலை, உதவி விதை அலுவலர் கோபி ஆகியோர் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

SCROLL FOR NEXT