பண்ருட்டியில் இறந்த ஓய்வு பெற்ற வங்கி ஊழியரின் கண்கள் தானம் செய்யப்பட்டன.
பண்ருட்டி, குப்பக்கவுண்டர் தெருவில் வசித்து வந்தவர் இருசப்பன் (61). இவர், செவ்வாய்க்கிழமை காலமானார். இவரது கண்களை அவரது குடும்பத்தினர் தானம் அளிக்க முன்வந்தனர்.
இதையடுத்து, பண்ருட்டி ரோட்டரி சங்கத்தினர் இருசப்பனின் கண்களை தானமாக பெற்று, புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவக் குழுவினரிடம் வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை பண்ருட்டி தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ், முன்னாள் தலைவர் சீனிவாசன் ஆகியோர் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.