கடலூர்

சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழா நிறைவு

தினமணி

சிதம்பரம் நடராஜர் கோயிலில் தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா மற்றும் தெற்குவீதி வி.எஸ். டிரஸ்ட் வளாகத்தில் நாட்டியாஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றன.
 சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், 36-வது ஆண்டு நாட்டியாஞ்சலி விழா தெற்கு வீதி வி.எஸ். டிரஸ்ட் வளாகத்திலும், தில்லை நாட்டிய அஞ்சலி டிரஸ்ட் சார்பில் நடராஜர் கோயிலிலும் நாட்டியாஞ்சலி விழா கடந்த 24-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற்றது.
 சிதம்பரம் நடராஜர் கோயில் நாட்டியாஞ்சலி விழாவில் செவ்வாய்க்கிழமை நாட்டியமாடிய கலைஞர்கள்: சிதம்பரம் சிவசக்தி நடனப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் சென்னை வேலம்மாள் பள்ளி மாணவிகள் பரதம், ஹைதராபாத் நாட்டியம் நடனப் பள்ளி மாணவிகளின் கூச்சுப்புடி நடனம், சிதம்பரம் சிவாலயா நடனப் பள்ளி மாணவிகளின் நாட்டிய நாடகம், சென்னை ஏ.எஸ்.ஹர்ஷிதா, ஹெசிகா, பெங்களூர் ஸ்வேதா வெங்கடேஷ், அண்ணாமலைப் பல்கலைக்கழக இசைத் துறை மாணவர்கள், சிதம்பரம் நடராஜர் நாட்டியப் பள்ளி மாணவர்கள், சின்னமனூர் ஏ.சித்ரா குழுவினரின் சிதம்பரம் சபாபதி விலாஸ நாட்டிய நாடகம்.
 தெற்குவீதி வி.எஸ்.டிரஸ்ட் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடனமாடிய கலைஞர்கள்: கரூர் பாரதி மற்றும் மாணவிகள், அரியலூர் தகதமிதா பள்ளி மாணவிகள், பெங்களூர் சினேகா தேவானந்தன், சென்னை உமா வி.சத்தியநாராயணன் ஆகியோரின் பரதம், கொல்கத்தா சிரபோனி பானர்ஜி மற்றும் மாணவிகளின் கதக் நடனம், மும்பை தீபக் மஜூம்தார் ரூபர் மேத்தா பரதம், மும்பை நாளந்தா நாட்டியப் பள்ளி மாணவிகளின் சந்தவாணி நடனம், பெங்களூரு நிருத்யா கலா மந்திரம் மாணவிகளின் பரதம்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT