கடலூர்

எரிவாயு உருளை வெடித்து அன்னதானக் கூடம் சேதம்

DIN

வடலூர் அருகே திங்கள்கிழமை அதிகாலை எரிவாயு உருளை வெடித்ததில், அன்னதானக் கூடம் எரிந்து சேதமடைந்தது.
கடலூர் மாவட்டம்,  வடலூர் அருகே  உள்ள மேட்டுக்குப்பம் கிராமத்தில், மதுரையைச் சேர்ந்த நந்தி சரவணன் என்பவர் அன்னதானக் கூடம் நடத்தி வருகிறார். இங்கு திங்கள்கிழமை அதிகாலை பலத்த வெடி சத்தத்துடன் தீ விபத்து ஏற்பட்டது. அன்னதானக் கூடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்து. அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர். அவர்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றும் முடியவில்லை.
பின்னர், குறிஞ்சிப்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்ட தீயணைப்பு அலுவலர் எம்.மகாலிங்கமூர்த்தி தலைமையில், நிலைய அலுவலர்கள் எஸ்.மணிவேலு(குறிஞ்சிப்பாடி), ராஜராஜசோழன்(சேத்தியாதோப்பு) ஆகியோர் கொண்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, சுமார் 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.
இந்த விபத்தில், அன்னதானக் கூடத்திலிருந்த பொருள்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. சமையல் செய்தபின் எரிவாயு அடுப்பை அணைக்காமல் விட்டதும், இதனால், எரிவாயு உருளை வெடித்ததுமே விபத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து வடலூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

திரெளபதி அம்மன் கோயில்களில் அக்னி வசந்த விழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தீ மிதித்தனா்

தமிழா்கள் பலமாக இருந்தால்தான் தமிழுக்கு வளம்: விஐடி வேந்தா் கோ.விசுவநாதன்

மாணவியின் படத்தை தவறாக சித்தரித்து அனுப்பிய சக மாணவரிடம் விசாரணை

SCROLL FOR NEXT