கடலூர்

வெளிநாட்டில் தவிக்கும் கணவர்: மீட்கக் கோரி மனைவி மனு

DIN

வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்கக் கோரி, அவரது மனைவி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தார்.
 கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், விருத்தாசலம் வட்டம், சிறுவரப்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா மனைவி செல்வி ஆட்சியரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் ராஜா தனியார் பேருந்து நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு அவரை விருத்தாசலத்தைச் சேர்ந்த சிலர் தொடர்புகொண்டு, சவூதிஅரேபியா நாட்டில் ஓட்டுநர் வேலை உள்ளதாகவும், மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம் தருவதாகவும் கூறினர். இதற்கு ரூ.1 லட்சம் செலுத்தி விட்டு விசா பெற்றுச்செல்லலாம் என்றும் தெரிவித்தனர். இதன்படி பணம் செலுத்தி, கடந்த 22.11.2016 அன்று சவூதி அரோபியாவுக்கு ராஜா சென்றார்.
ஆனால், அங்கு அவருக்கு சரியாக வேலை வழங்காமலும், உணவு வழங்காமலும் சித்ரவதை செய்து வருகின்றனர். உடல் நலம் சரியில்லாமல் இருந்தவருக்கு மருத்துவ வசதி கூட மறுக்கப்படுகிறது. இதுதொடர்பாக கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) மூலமாக எனக்கு தகவல் தெரிவித்தார்.
 இதுதொடர்பாக, எனது, கணவரை வெளிநாட்டுக்கு அனுப்பியவர்களை தொடர்புகொண்டபோது அவர்கள் தரக்குறைவாக பேசுவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வருகின்றனர். எனது, கணவரை மீட்க வேண்டும். எனக்கு மிரட்டல் விடுத்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில்
குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

மனதை திருடும் மாயம் என்ன?

ககன்யான் திட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!

முகல் தோட்டத்து மலரோ..!

விண்கல்லால் 6,900 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பள்ளம்!

SCROLL FOR NEXT