ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரம் விநியோகம்
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
விருத்தாசலம் ரயில் நிலையத்தில் பயணிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு இருப்புப் பாதை காவல் நிலைய ஆய்வாளர் க.பாஸ்கர் தலைமை வகித்து, ரயில் பயணிகளுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்.
அப்போது அவர் கூறியதாவது: பயணிகள் தங்களது ரயில் பயணத்தின் போது, பாதுகாப்புடன் நடந்துக் கொள்ள வேண்டும். தங்களது உடமைகளைப் பாதுகாத்து, சந்தேகப்படும்படியான நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தல் தெரியப்படுத்த வேண்டும்.
உதவிகள் தேவைப்பட்டால், ரயில் வரும் காவலர் அல்லது ரயில்வே அவசர உதவி எண் 1512 மற்றும் 99625 00500 என்ற எண்ணிலும் தகவல் தெரிவிக்கலாம். உதவி ஆய்வாளரை 94981 09145 என்ற எண்ணிலும் தொடர்புக் கொள்ளலாம். மேலும், ரயில்வே பாதுகாப்புப் படையினரை 182 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என்றார். உதவி ஆய்வாளர் அ.வை.திருமாவளவன், தேசிய மாணவர் படை, நாட்டு நலப் பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டு ரயில் பயணிகளுக்கு விழிப்புனர்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.