கடலூர்

விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வுப் பேரணி

தினமணி

பண்ருட்டி ரோட்டரி, ரோட்டராக்ட் சங்கம், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, போக்குவரத்து காவல் துறை, அரசு மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் இணைந்து விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வுப் பேரணியை பண்ருட்டியில் வியாழக்கிழமை நடத்தினர்.
 ரோட்டரி சங்கத் தலைவர் கோ.காமராஜ் தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் ஜி.பூவராகமூர்த்தி கொடியசைத்து பேரணியை தொடக்கி வைத்தார். தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் ஐ.செந்தில்குமார், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசுப் பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணியில் திரளான மாணவர்கள் பங்கேற்று, விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு கோஷங்களை முழங்கியபடி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியை அடைந்தனர்.
 நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ஆர்.சந்திரசேகர், முத்துக்குமரப்பன், தொழில் வர்த்தக சங்கத் தலைவர் டி.சண்முகம், ரோட்டரி நிர்வாகிகள் ஜி.சீனுவாசன், மதிவாணன், ரோட்டரி சங்க பொருளாளர் என்.டி.ரவிசேகர், ரோட்டராக்ட் தலைவர் அருண்ராஜ், செயலர் புருஷோத்தமன், பொருளாளர் பானுகோபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரோட்டரி சங்கச் செயலர் அ.ஏழுமலை நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT