கடலூர்

போட்டிகளில் வென்ற கல்லூரி மாணவர்களுக்கு பரிசு

DIN

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
கல்லூரி முதல்வர் (பொ) ப.குமரன் தலைமையேற்று போட்டிகளை தொடக்கி வைத்தார். இதில், பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் 65 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். கவிதைப் போட்டியில், கடலூர், கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி மாணவி சு.நந்தினி, குறிஞ்சிப்பாடி, திருவள்ளுவர் கல்லூரி மாணவி பா.தேவி, நெய்வேலி, ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவர் இரா.மணிகண்டன் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
கட்டுரைப் போட்டியில், நெய்வேலி, ஜவகர் அறிவியல் கல்லூரி மாணவி பா.பவித்ரா, வடலூர், ஓ.பி.ஆர், நினைவு கல்லூரி மாணவி ப.ஸ்ரீதேவி, கிருஷ்ணசாமி மகளிர் கல்லூரி மாணவி அ.தாக்ஷôயணி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
பேச்சுப் போட்டியில், கடலூர், புனித.வளனார் கல்லூரி மாணவர் இர.தினகர், அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி ரா.அ.கவிஉதயநிதி, சிதம்பரம், அரசு கலைக் கல்லூரி மாணவி ரா.தேன்மொழி ஆகியோர் வெற்றி பெற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT