கடலூர்

பெருமாள் கோயில்களில் அமாவாசை வழிபாடு 

தினமணி

பண்ருட்டியில் உள்ள பெருமாள் கோயில்களில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 பண்ருட்டி திருவதிகையில் சரநாராயணப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்தக் கோயிலில், அமாவாசை வழிபாடு மாதந்தோறும் சிறப்பாக நடைபெறும். அதன்படி, சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனையொட்டி, சென்னை - திருவல்லிக்கேணி கோயில் பார்த்தசாரதி அலங்காரத்தில் மூலவர் காட்சியளித்தார். உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் திருக்கண்ணாடி அறையில் அருள் பாலித்தார். ஹேமாம்புஜவள்ளி தாயார் வெள்ளி அங்கி அலங்காரத்தில் காட்சியளித்தார்.
 இதேபோல, பண்ருட்டி வரதராஜப் பெருமாள், திருவதிகை அரங்கநாதப் பெருமாள் கோயில்களில் அமாவாசை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT