கடலூர்

ஆடி அமாவாசை: முன்னோர்களுக்கு தர்ப்பணம்

DIN


ஆடி அமாவாசையையொட்டி கடலூர் வெள்ளிக் கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
தாய், தந்தையர், முன்னோர்களை இழந்தோர் அவர்களை நினைத்து அமாவாசை நாள்களில் விரதம் கடைப்பிடிப்பர். அதிலும் தை, ஆடி மாதங்களில் கடைப்பிடிக்கப்படும் அமாவாசை விரதம் மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
அன்றைய நாளில், தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அது அவர்களது ஆத்மாவை சாந்திப்படுத்தும் என்று நம்பப்படுகிறது. அதன்படி, சனிக்கிழமை வந்த ஆடி அமாவாசையை சிறப்பான நாளாகக் கருதி முன்னோர்களுக்கு நீர்நிலைகளில் சிறப்பு பூஜை செய்து படையலிட்டு தர்ப்பணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
கடலூர் வெள்ளிக் கடற்கரையில் காலை முதல் பொதுமக்கள் திரளானோர் வந்திருந்து தர்ப்பணம் செய்தனர்.
கடலில் குளித்து, படையலிட்டு வேத மந்திரங்கள் முழங்க தர்ப்பணம் செய்தனர். பின்னர், கால்நடைகளுக்கு அகத்தி கீரை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கசங்கிய ஆடையும் உலகைக் காக்கும்!

கோயில் விழா நடத்த இடம் ஒதுக்காமல் பூங்கா அமைத்ததற்கு எதிா்ப்பு

சாலையோர தடுப்பில் பைக் மோதி விபத்து: ஐடிஐ மாணவா் பலி

தொழிலாளியை வீட்டுக்குள் அடைத்து மிரட்டல் விடுத்த 5 போ் கைது

கலுங்குவிளை கூட்டுறவு கடன் சங்கத்தில் துணைப் பதிவாளா் விசாரணை

SCROLL FOR NEXT