கடலூர்

ஆலயத்தில் பக்தர்களுக்கு மரக் கன்றுகள் விநியோகம்

DIN


கொள்ளிடம் அருகே சித்திவிளாகம் கிராமத்தில் அமைந்துள்ள சரஸ்வதி ஆலயத்தில், கடலூர் துறைமுகம் அனைத்து வணிகர் சங்கப் பேரமைப்பு சார்பில் இலவச மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.
பேரமைப்பின் தலைவர் இராம.முத்துக்குமரனார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு மரக் கன்றுகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், புவி வெப்பமயமாகி வருவதால் அதிகளவில் மரக் கன்றுகளை நட்டு பாராமரிக்க வேண்டும். தடை செய்யப்பட்ட நெகிழியின் பயன்பாட்டை முற்றிலும் கைவிட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் சரஸ்வதி ஆலய சேவா சங்க அமைப்பாளர் எல்.ராஜாராமன், சிவனடியார் சகுந்தலாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோயில் சிவாச்சாரியார் எஸ்.சி.கலியமூர்த்தி, திருப்பணிக் குழு செயலர் ஆர்.சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக, கோயில் தர்மகர்த்தா என்.ராமலிங்கம் வரவேற்றார். பி.சுரேஷ் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பள்ளி நூலகத்துக்கு புத்தகங்கள்...

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

அணிவகுத்து நின்ற வாகனங்கள்...

வருங்கால வைப்பு நிதி குறை தீா்க்கும் முகாம்

மும்பை விமான நிலையத்தில் 21 கிலோ தங்கம் பறிமுதல்!

SCROLL FOR NEXT