கடலூர்

மாணவர்களுக்கு திறன் ஆய்வுப் பயிலரங்கம்

DIN

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக நாட்டு நலப் பணித் திட்டம் அங்கம்: 36, உளவியல் துறை மாணவர்களுக்கான திறன் ஆய்வுப் பயிலரங்கம் லிப்ரா அரங்கத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதன் நோக்கம் மாணவர்களின் திறனை ஆராய்தல் ஆகும். இதில், 150 மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் இருந்து பங்கேற்று பயன் பெற்றனர்.
நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பி.செளந்தரபாண்டியன் வரவேற்றார். துணைவேந்தர் எஸ்.மணியன் விழாவைத் தொடக்கி வைத்துப் பேசினார். கல்வியல் புல முதல்வர் ஆர்.பாபு தலைமை வகித்து பேசினார். உளவியல் துறை முன்னாள் தலைவர் வி.சுரேஷ் வாழ்த்துரைத்தார். பயிலரங்கத் திட்ட அலுவலர் ஆர்.நீலகண்டன் நன்றி கூறினார்.
இதில், உளவியியல் துறை நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்களால் பிற துறை மாணவர்களுக்கு திறன் ஆய்வு செய்யப்பட்டது. நேர்முகத் தேர்வை எதிர்கொள்ளுதல் குறித்து மாணவர்களுக்கு பேச்சாளர் சிவகுமார் விளக்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT