கடலூர்

தில்லைக்காளிக்கு மகாபிஷேகம்

தினமணி

சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள பிரசித்திபெற்ற தில்லைக்காளியம்மன் கோயிலில், ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு மகாபிஷேகம், 207-வது சிறப்பு அர்த்தசாம பூஜை வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
 முன்னதாக, கோயில் வளாகத்தில் உள்ள விநாயகர், பிரம்மசாமுண்டி சந்நிதிகளில் நெய் தீப ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து தில்லைக்காளியம்மனுக்கு குடம், குடமாக நல்லெண்ணெய் அபிஷேகமும், தைலக்காப்பு, குங்குமக்காப்பு ஆகியவை செய்யப்பட்டு, வாசனை திரவியம், வெட்டிவேர், விலாமிச்சு வேர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
 திரளான பக்தர்கள் மகாபிஷேகத்தை தரிசித்தனர்.
 சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை அமாவாசை அர்த்தசாம அபிஷேக மண்டலி நிர்வாகி எஸ்.வைத்தியநாதன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT