கடலூர்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்

DIN

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கத்தினர் கடலூரில் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்க மாவட்டத் தலைவர் ஏ.ரங்கநாதன் தலைமை வகித்தார். காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ஏ.எஸ்.சந்திரசேகரன், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கத் தலைவர் பி.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், ஏழாவது ஊதியக் குழு பணப்பலன் 21 மாதங்களுக்கு உரிய நிலுவைத் தொகையை ரொக்கமாக வழங்க வேண்டும்.  குறைந்தபட்ச ஓய்வூதியம் சிறப்பு ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.9 ஆயிரமாக வழங்க வேண்டும். ஊதியக்குழு குறைபாடுகளை களைந்திட ஒரு நபர் குழு அமைத்து உரிய காலக்கெடுவுக்குள் சரிசெய்ய வேண்டும். 
புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே செயல்படுத்த வேண்டும். ஓய்வூதியர் இருந்தால் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ.1.50 லட்சமாக வழங்க வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைவருக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT