கடலூர்

என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்

தினமணி

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலியில், காமராஜர் சிலை அருகே வியாழக்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் சிறப்புத் தலைவர் என்.ராமமூர்த்தி தலைமை வகித்தார். நிறுத்தப்பட்ட என்எல்சி இன்கோ-சர்வ் தேர்தலை நடத்த வேண்டும். வழங்கப்படாமல் உள்ள பஞ்சப்படி, ஊதிய உயர்வு நிலுவை ஆகியவற்றை முன்தேதியிட்டு வழங்க வேண்டும், மீதமுள்ள அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்களையும் இன்கோசர்வ் சொசைட்டியில் இணைக்க வேண்டும், உச்சநீதி மன்ற தீர்ப்பின்படி அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர்.
 சங்கத் தலைவர் ஏ.அந்தோணிசெல்வராஜ், பொதுச்செயலர் ஆர்.செல்வமணி, பொருளாளர் வி.கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். என்எப்டிசிஎல் மாநிலச் செயலர் எஸ்.ஆனந்தன் சிறப்புரையாற்றினார். என்எல்சி ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தின் சிறப்புச் செயலர் எம்.சேகர் கண்டன உரை நிகழ்த்தினார். கூட்ட முடிவில் பிரசார செயலர் சி.முனியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT