கடலூர்

மரவள்ளிக் கிழங்கு தரம் பரிசோதனை: கூட்டுறவுச் சங்கத்தில் புதிய இயந்திரம்

DIN

மரவள்ளிக் கிழங்கு தரத்தை பரிசோதனை செய்வதற்கான கூட்டுறவு கடன் சங்கத்தில் புதிய இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதாக கடலூர் மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் சொ.இளஞ்செல்வி தெரிவித்தார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கூட்டுறவுத் துறை மூலம் கடலூர் வட்டம், நடுவீரப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் விவசாயிகளின் பயன்பாட்டுக்கு முதன்முதலாக மரவள்ளிக் கிழங்கு தரம் பார்ப்பதற்கான இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. 
இதன்மூலம் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் மரவள்ளிக் கிழங்கின் தரத்தை சரியாக அறிந்துகொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 
மேலும், தரம் பார்ப்பதற்காக தனியார் நிறுவனத்தை விட குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ.50 மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படும். 
எனவே, விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஏற்காட்டில் பேருந்து விபத்து : 4 பேர் பலி

கண்ணெதிரே 3 ஐசிசி கோப்பைகள்; பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனின் இலக்கு என்ன?

சின்ன சின்ன பார்வை..!

போஜ்புரி போகன்வில்லா..!

லக்னௌ பந்துவீச்சு; அணியில் டி காக் இல்லை!

SCROLL FOR NEXT