கடலூர்

கடலூர் நகரில் போக்குவரத்தை மேம்படுத்த ஆட்சியரிடம் மனு

DIN

கடலூர் நகரில் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டுமென அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். 
இதுதொடர்பாக கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பட்டுள்ள மனு: கடலூர் நகரம் முழுவதும் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் முழுமையாக குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். 
பல இடங்களில் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாவதை தடுக்க வேண்டும். பழைய குடிநீர்க் குழாய்களை மாற்றி புதிய குழாய்கள் அமைக்க வேண்டும். சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் குப்பைகள், கழிவு நீர் ஆற்றில் கலப்பதை தடுக்க வேண்டும். 
கடலூர் நகரம் தற்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது. நெல்லிக்குப்பம் பிரதான சாலையிலிருந்து கோண்டூர் வரை நடுத் தடுப்புடன் சாலை சீரமைக்கப்பட வேண்டும். தேவையான இடங்களில் பல்லடுக்கு மேம்பாலம் கட்ட வேண்டும். கம்மியம்பேட்டை வழியாக சிற்றுந்து, ஷேர் ஆட்டோ வசதி ஏற்படுத்த வேண்டும். மாற்று புறவழிச் சாலை பணிகளை துரிதப்படுத்த வேண்டும். கெடிலம் ஆற்றின் கரையில் திருவந்திபுரம் வரை செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும்.  அதேபோல, வடிகால்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்லும் வகையில் சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

மகனைக் கொல்ல ரூ.75 ஆயிரம் கூலி: கைதான தேடப்பட்ட குற்றவாளி!

தீபக் சஹாருக்கு காயமா? சிஎஸ்கே பயிற்சியாளர் பதில்!

கத்தரிப்பூ சேலைக்காரி! மிருணாளினி ரவி...

SCROLL FOR NEXT