கடலூர்

நெகிழி தடுப்பு விழிப்புணர்வு முகாம்

DIN

நேரு இளையோர் மையத்தின் கீழ் செயல்படும் இயற்கை இளையோர் மன்றம் சார்பில், கடலூர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நெகிழி தடுப்பு விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
 மன்றத் தலைவர் இரா.சண்முகம் தலைமை வகித்து, நெகிழிப் பொருள்களால் மனிதர்களுக்கும், மண்ணுக்கும், பிற உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார். 
 தொடர்ந்து அரசு சார்பில், நெகிழி பயன்படுத்தாத பள்ளி என்ற பெயர்ப் பலகையை திறந்து வைத்தார்.  பின்னர், நெகிழி எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. பள்ளி வளாகத்திலிருந்த குப்பைகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.
 நிகழ்ச்சியில், மன்ற பொருளாளர் எஸ்.புவனேஸ்வரி, ஜேசிஐ கடலூர் விடியல் தலைவர் பி.சசிதரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளி ஆசிரியர் வினயா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

SCROLL FOR NEXT