கடலூர்

ஓய்வூதியர் சங்கப் பேரவை

DIN

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட 4}ஆவது பேரவைக் கூட்டம், 
மாவட்டத் தலைவர் கோ.பழநி தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது. 
கூட்டத்தில், மாவட்டச் செயலர் ஆர்.மனோகரன் செயல் அறிக்கை தாக்கல் செய்தார். பொருளாளர் வி.சுந்தரராஜன் வரவு}செலவு கணக்கை முன்வைத்தார். மாநிலச் செயலர் தி.புருஷோத்தமன் தொடக்க உரையும், மாநில துணைத் தலைவர் ஆர்.ஜோதி நிறைவுரையும் ஆற்றினர். கூட்டத்தில், புதிய ஓய்வூதிய சட்டத்தை அரசு திரும்பப் பெற வேண்டும். ஓய்வூதியர்களிடம் வருமான வரி பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்தில் பிடித்தம் தொகையை ரூ.180}ஆக குறைக்க வேண்டும். 
மூத்த குடிமக்களுக்கு இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். புவனகிரி வட்டத்தில் சார்நிலை கருவூலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 
பேரவையில், விருத்தாசலம் மாவட்ட செயலர் கேசவன், அனைத்து குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச் செயலர் மு.மருதவாணன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.பாலசுப்ரமணியன், அகில பாரத மூத்த குடிமக்கள் அமைப்பு சார்பில் ச.சிவராமன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் (ஓய்வு) பி.கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். முன்னதாக மாவட்ட துணைத் தலைவர் சி.குழந்தைவேலு 
வரவேற்றார். இணைச் செயலர் என்.காசிநாதன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வனப் பகுதிகளில் விலங்குகளுக்காக தண்ணீா்த் தொட்டிகள்

வேடசந்தூா் பணிமனை ஓட்டுநருக்கு பாராட்டு

முதலமைச்சா் மாநில இளைஞா் விருது: மே 15 வரை விண்ணப்பிக்கலாம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

காந்திகிராம பல்கலை. மாணவா் சோ்க்கை: மே 31 வரை விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT