கடலூர்

அவதூறு பதிவை வெளியிட்டவர் தடுப்புக் காவலில் கைது

DIN

சமூக வலைதளத்தில் அவதூறு பதிவை வெளியிட்டவர் தடுப்புக் காவலில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 மக்களவைத் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்தில்  குறிப்பிட்ட சமூகத்தை தரக்குறைவாக விமர்சித்து கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்-அப்) பதிவு வெளியிட்டதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவரான, விருத்தாசலம் மணலூரைச் சேர்ந்த சிறுத்தை 
சிவக்குமார் (40)  என்பவர் குண்டர் தடுப்பு காவலில் விருத்தாசலம் போலீஸாரால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
 கலகத்தை விளைவிக்கும் உள்கருத்தோடு சமூக வலைதளத்தில் விடியோ பதிவை வெளியிட்டதால் அவரை தடுப்புக் காவலில் கைது செய்திட வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு எஸ்பி ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன்பேரில் அதற்கான உத்தரவை ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டதைத் தொடர்ந்து சிவக்குமார் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT