கடலூர்

புதிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து அரசுக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

DIN

மத்திய அரசின் புதிய வரைவு கல்விக் கொள்கையை எதிர்த்து, கடலூர் அரசுக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்விக் கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், மத்திய அரசு புதிய வரைவு கல்விக் கொள்கையை வெளியிட்டது. இந்தத் திட்டத்தின் மீது கருத்துக் கேட்பு நடைபெற்று வரும் நிலையில், இந்தக் வரைவு கல்விக் கொள்கையால் ஏழை, எளிய மாணவர்கள் உயர்கல்வி பெற முடியாத நிலை ஏற்படும் என்று கூறி, பல்வேறு மாணவர் இயக்கங்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. 
அந்த வகையில், புதன்கிழமை கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள அரசு பெரியார் கலைக் கல்லூரி மாணவர்கள் புதன்கிழமை வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கல்லூரி எதிரே தங்களது கோரிக்கைகள் தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு அவர் முழக்கமிட்டனர்.
 இதனால், புதன்கிழமை கல்லூரியில் பெரும்பாலான வகுப்புகள் நடைபெறவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் ஏர் இந்தியா- விமான பணியாளர்கள் பிரச்னை: பயணிகளுக்குத் தீர்வு என்ன?

மீண்டும் பிரபுதேவா - தனுஷ் கூட்டணி!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

ஜிவி பிரகாஷின் கள்வன்: ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஓ மை ரித்திகா!

SCROLL FOR NEXT