கடலூர்

மாற்றுத் திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்

DIN

கடலூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் வியாழக்கிழமை மாலையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டு மாதாந்திர உதவித்தொகை, வங்கி கடன், பசுமை வீடு, வேலைவாய்ப்பு, ஆவின் பாலகம் அமைத்தல் மற்றும் உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பங்களை அளித்தனர். மேலும்.  மாற்றுத் திறனாளிகள் சங்கப் பிரதிநிதிகள் மாற்றுத் திறனாளிகள் உரிமை தொடர்பான கோரிக்கை மனுவையும்  ஆட்சியரிடம் அளித்தனர். கூட்டத்தில் அனைத்து மாற்றுத் திறனாளிகளுக்கும் மாத உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், அனைத்து கோரிக்கைகளையும் பரிசீலித்து அரசு விதிமுறைகளுக்கு உள்பட்டு செயல்படுத்தப்படும் என்று ஆட்சியர் உறுதியளித்தார். 
தொடர்ந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.6,400 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
கூட்டத்தில் தனித் துணை ஆட்சியர் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

SCROLL FOR NEXT