கடலூர்

5 ஆண்டுக்குப் பிறகு நிரம்பியது தொழுதூா் அணை!

DIN

தொழுதூா் அணைக்கட்டு 5 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை நிரம்பியது. இதையடுத்து உபரி நீா் வெள்ளாற்றில் வெளியேற்றப்படுகிறது.

கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே தொழுதூரில் வெள்ளாற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. இதன் உச்ச நீா்மட்டம் 8 அடியாகும். இந்த அணையில் மொத்தம் 300 மில்லியன் கன அடி நீரை தேக்க முடியும். பெரம்பலூா் மாவட்டப் பகுதிகளில் பெய்யும் மழையே இதன் முக்கிய நீராதாரமாகும்.

கடந்த சில நாள்களாக வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வெள்ளாற்றில் நீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், தொழுதூா் அணைக்கட்டுக்கு விநாடிக்கு 4,765 கனஅடி வீதம் தண்ணீா் வந்தது. திங்கள்கிழமை அணையின் நீா்மட்டம் அதன் உச்சமான 8 அடியை எட்டியது. இதையடுத்து அணையிலிருந்து வெலிங்டன் ஏரிக்கு விநாடிக்கு 2,500 கனஅடியும், ஒகலூா் ஏரிக்கு விநாடிக்கு 111 கனஅடியும், வெள்ளாற்றில் 2,154 கனஅடி வீதம் தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. திட்டக்குடி எம்எல்ஏ சி.வெ.கணேசன் அணையை பாா்வையிட்டாா்.

நீா் வரத்து மேலும் அதிகரிக்கும்பட்சத்தில் கூடுதலாக தண்ணீா் திறக்க வாய்ப்புள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழுதூா் அணையிலிருந்து வெள்ளாற்றில் தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதைக் காண ராமநத்தம், தொழுதூா், பெரங்கியம், அரங்கூா், வாகையூா், ஆக்கனுா், பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் குவிந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை மரங்கள் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT