திட்டக்குடி வழியாகச் செல்லும் ராமநத்தம் - விருத்தாசலம் மாநில நெடுஞ்சாலையில் திட்டக்குடி பேருந்து நிறுத்தம் அருகே திடீரென வெள்ளிக்கிழமை பள்ளம் தோண்டியதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த சாலை வழியாகவே திருச்சி, சேலம், விருத்தாசலம், நெய்வேலி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு ஏராளமான வாகனங்கள் தினமும் சென்று வரும் நிலையில், எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் நெடுஞ்சாலைத்துறையினர் திடீரென பள்ளம் தோண்டினர். இதனால், அனைத்து வாகனங்களும் ஒரே வழியிலேயே சென்று வர வேண்டியிருந்தது. மேலும், காலை நேரத்தில் பள்ளி, கல்லூரி வாகனங்கள் சுமார் அரை மணி நேரம் வரை காத்திருந்த பிறகே அப்பகுதியை கடக்க வேண்டியிருந்தது. இது காலையில் பள்ளி, அலுவலகம் சென்றோரை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கியது.
ஏற்கெனவே திட்டக்குடி சாலையில் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதால் சாலை குறுகிய நிலையில் இருக்கும். இந்த நிலையில், தோண்டப்பட்ட பள்ளத்தால் கூடுதலாக இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன் கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை அல்லது பேரூராட்சி நிர்வாகம் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் என்று சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.