கடலூர்

வள்ளலார் தெய்வ நிலையத்தில் உண்டியல் காணிக்கை ரூ.13 லட்சம்

DIN

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து  எண்ணப்பட்டதில் காணிக்கையாக ரூ.13.16 லட்சம் பெறப்பட்டது.
 இதில், வடலூர் வள்ளலார் தெய்வ நிலையம், ஞான சபையில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் திறந்து  எண்ணப்பட்டதில் ரூ.4,34,487 காணிக்கை இருந்தது. இதேபோல, தரும சாலை உண்டியலில் ரூ.5,12,040,  மேட்டுக்குப்பம் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.3,69,658 இருந்தது. மொத்தம் ரூ.13,16,185 காணிக்கை கிடைத்தது.
 இந்து சமய அறநிலையத் துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில், பண்ருட்டி ஆய்வாளர் ஜெயசித்ரா, வள்ளலார் தெய்வ நிலைய செயல் அலுவலர் ஆர்.கருணாகரன் முன்னிலையில் வங்கி ஊழியர்கள், சுய  உதவிக் குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் இணைந்து உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT