கடலூர்

திமுக பொதுக்கூட்டம்

DIN

சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
 நகரச் செயலர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். நகர துணைச் செயலர் சி.பன்னீர்செல்வம் வரவேற்றார். கூட்டத்தில் திமுக முதன்மைச் செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 அவர் பேசியதாவது:
 ஐநா மன்றத்தில் 193 நாடுகள் கையெழுத்திட்டு பிப்.21-ஆம் தேதியை தாய்மொழி தினமாக உலக நாடுகள் கொண்டாடி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் தாய்மொழி தினம் கொண்டாடப்படுவதில்லை. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வரானதும் ஆண்டுதோறும் தாய்மொழி தினம் கொண்டாட நடவடிக்கைஎடுக்கப்படும்.
 தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம்தான் மொழிப் போராக உருவானது என்றார் அவர்.
 கூட்டத்தில் கடலூர் கிழக்கு மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்எல்ஏ பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 புவனகிரி தொகுதி எம்எல்ஏ துரை.கி.சரவணன், தலைமைக் கழகப் பேச்சாளர் பவானி.கண்ணன், மாநில ஆதிதிராவிட நலக்குழு இணைச் செயலர் மருதூர்.இ.ராமலிங்கம், தலைமை செயற்குழு உறுப்பினர் பா.பூபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் தா.ஜேம்ஸ் விஜயராகவன், கே.ராஜேந்திரகுமார், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வி.முருகேசன்
 உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகர துணைச் செயலர் பா.பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

ஐஸ்வர்யா ராஜேஷ் அசத்தல் கிளிக்ஸ்!

அறிவியல் ஆயிரம்: நெருப்பு ஊர்வலங்கள்... சூரிய தோரணங்கள்

SCROLL FOR NEXT