கடலூர்

வள்ளலார் தெய்வ நிலைய உண்டியல் காணிக்கை ரூ.12.90 லட்சம்

DIN

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் தைப்பூச திருவிழாவின்போது வைக்கப்பட்டிருந்த உண்டியல்கள் செவ்வாய்க்கிழமை திறந்து எண்ணப்பட்டதில், ரூ.12,90,526 காணிக்கை பணம் இருந்தது.
 வள்ளலார் தெய்வ நிலையத்தில் 148-ஆவது தைப்பூசப் பெருவிழா கடந்த 21-ஆம் தேதி நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.
 திருவிழாவை முன்னிட்டு, தெய்வ நிலைய வளாகத்தில் 18 தற்காலிக உண்டியல்கள், 5 நிரந்தர உண்டியல்கள், 2 திருப்பணி உண்டியல்கள் என மொத்தம் 25 உண்டியல்கள் வைக்கப்பட்டிருந்தன.
 இந்த உண்டியல்களை திறந்து எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை தெய்வ நிலைய வளாகத்தில், உதவி ஆணையர் கி.ரேணுகாதேவி தலைமையில், செயல் அலுவலர் ஆர்.கருணாகரன், பண்ருட்டி ஆய்வாளர் பா.ஜெயசித்ரா, தெய்வ நிலைய கணக்காளர்
 ஞானப்பிரகாசம் முன்னிலையில் நடைபெற்றது.
 இதில், தற்காலிக உண்டியல்களில் ரூ.5,99,563, நிரந்தர உண்டியல்களில் ரூ.5,12,616, திருப்பணி உண்டியலில் ரூ.1,78,347என மொத்தம் ரூ.12,90,526 காணிக்கை பணம் இருந்தது. இதுதவிர, 7 கிராம் தங்கம், 45 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாடுகளின் ரூபாய் நோட்டுகள் 15 இருந்தன. உண்டியல் எண்ணும் பணியில் பார்வதிபுரம் கிராம மக்கள், கூட்டுறவு வங்கிப் பணியாளர்கள், சுய உதவிக் குழுவினர், வள்ளலார் குருகுலம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT