கடலூர்

புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்

DIN

கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டு வெள்ளிக்கிழமை இறக்கப்பட்டது.
வங்கக் கடலில் உருவான "பானி' புயல் தமிழகத்தில் கரையைக் கடக்கும் என்று முதலில் கூறப்பட்டு வந்தது. பின்னர், புயலின் திசை மாறியதைத் தொடர்ந்து, ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டது. "பானி' புயல் சின்னம் காரணமாக கடலூர் துறைமுகத்தில் கடந்த ஏப்.26-ஆம் தேதி ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும், 27-ஆம் தேதி இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டும் ஏற்றப்பட்டு தொடர்ந்தது.  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை "பானி' புயல் ஒடிஸா மாநிலத்தில் கரையைக் கடந்தது. இதனால், கடலூர் துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கப்பட்டு, புயல் எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது. கடந்த சில நாள்களாக மேகமூட்டத்துடன் கடும் வெப்பமான சூழல் நிலவி வந்தது. வெள்ளிக்கிழமை இந்த நிலை மாறி காலை முதல் வெயிலின் தாக்கம்  கடுமையான இருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 102.2 டிகிரி வெப்ப நிலை பதிவானது. இதனால், பகல் நேரத்தில் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. கடல் அலையின் சீற்றம் சற்று அதிகமாகவே இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்வியைப் போல தன்னம்பிகை தருவது வேறு எதுவுமில்லை: வெ.இறையன்பு

தொழுநோயாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்

கிடப்பில் விடியல் திட்டம் மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளா்கள் அவதி

வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட 6 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி

வில்வித்தை உலகக் கோப்பை: இந்தியாவுக்கு 4 தங்கம் ஜோதி சுரேகாவுக்கு ஹாட்ரிக் தங்கம்

SCROLL FOR NEXT