கடலூர்

பெண்ணிடம் 10 பவுன் நகை, ரூ.10 லட்சம் மோசடி: ஒருவர் கைது

DIN

நெய்வேலியில் பெண்ணிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணம் பெற்று ஏமாற்றியவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
 நெய்வேலி, 20-ஆவது வட்டம், பசும்புல் தெருவைச் சேர்ந்த கலியபெருமாள் மனைவி காந்திமதி (43). இவர் நெய்வேலி நகரியத்தில் உள்ள சாய்பாபா கோயிலுக்கு சென்று வருவது வழக்கமாம். அப்போது, நெய்வேலி, 21-ஆவது வட்டத்தைச் சேர்ந்த தங்கராஜ் மகன் செந்தில்குமார் என்பவருன் காந்திமதிக்கு நட்பு ஏற்பட்டது. அப்போது, செந்தில்குமார்  டிராவல்ஸ் வைத்து நடத்துவதாக தெரிவித்தாராம். 
 இந்த நிலையில் தனக்கு உடல் நிலை சரியில்லை எனக்கூறி காந்திமதியிடம் இருந்து 10 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் பணத்தை செந்தில்குமார் பெற்றாராம். ஆனால், பணம், நகையை திருப்பித் தரவில்லையாம். 
இதுகுறித்த புகாரின் பேரில் நெய்வேலி நகரிய போலீஸார் வழக்குப் பதிந்து செந்தில்குமாரை கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபுரந்தீஸ்வரா்

தேய்பிறை அஷ்டமி வழிபாடு

விடுதிகளில் தங்கி விளையாட்டு பயிற்சி: மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT