கடலூர்

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது

DIN

தொடர் திருட்டில் ஈடுபட்டவர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
 கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆத்திரிகுப்பத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி ராணி (30). இவர், கடந்த மார்ச் 25- ஆம் தேதி சொரத்தூர் பேருந்து நிறுத்தத்தில் நின்றிருந்த போது அவரிடம் வழிப்பறி செய்யப்பட்டது.
 இதுதொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விழுப்புரம் மாவட்டம், வளவனூரைச் சேர்ந்த ச.வேலனை (41) (படம்) கைது செய்தனர். இவர் மீது முத்தாண்டிகுப்பம், காடாம்புலியூர், திருப்பாதிரிபுலியூர் ஆகிய காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்தது.
 எனவே, அவரது குற்றச் செய்கையைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பரிந்துரைத்தார். அதன் பேரில், அதற்கான உத்தரவை ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வழங்கினார்.
 இதையடுத்து, வேலன் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT