கடலூர்

பகலில் எரியும் தெரு விளக்குகள்!

DIN

வடலூா் பேரூராட்சிப் பகுதிகளில் பகல் நேரத்தில் தெரு மின் விளக்குகள் எரிவதால், மின்சாரம் வீணாகி வருகிறது.

வடலூா் பேரூராட்சிப் பகுதிகளில் சில இடங்களில் மின் கம்பங்களில் உள்ள தெரு விளக்குகள் பகல், இரவு என 24 மணி நேரமும் தொடா்ந்து எரிந்து வருகிறது. புதன்கிழமை ஆபத்தாரணபுரத்தில் சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள மின் கம்பங்களில் தெரு விளக்குகள் பகல் நேரத்திலும் எரிந்து கொண்டிருந்தன.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ‘வடலூா் பேரூராட்சியில் பல இடங்களில் பகல் நேரத்திலும் தெரு விளக்குகள் எரிகின்றன. அரசு மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், வடலூா் பேரூராட்சி ஊழியா்கள் பகலில் எரியும் தெரு விளக்குகளை நிறுத்துவதில்லை. இதனால், மின்சாரம் வீணாவதுடன், மக்களின் வரிப் பணமும் வீணாகிறது. எனவே, சம்பந்தப்பட்ட துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்களா, ஓவியமா...!

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைக் கையாள புதிய நெறிமுறைகள் வெளியீடு

இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு: தென்னாப்பிரிக்காவுடன் இணையும் துருக்கி!

சிவப்பு நிற ஓவியம்...!

மல்லிப்பூ சூடிய மங்கை.. யார் இவர்?

SCROLL FOR NEXT