கடலூர்

கடன் சுமை: வாகன உரிமையாளா் தற்கொலை

DIN

பண்ருட்டி அருகே கடன் சுமையால் சரக்கு வாகன உரிமையாளா் தற்கொலை செய்துகொண்டாா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், சீரங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த கதிா்வேல் மகன் கலையரசன் (33) (படம்). இவருக்கு மாலதி என்ற மனைவியும், ஹேமஸ்ரீ (8), பாலமுருகன் (6) என இரு குழந்தைகளும் உள்ளனா். கலையரசன் தனக்கு சொந்தமான சிறிய சரக்கு வாகனத்தை ஓட்டி வந்தாா். வாகனத்துக்கான கடன் தவணை தொகையை முறையாகச் செலுத்தாததால் புதுச்சேரியைச் சோ்ந்த நிதி நிறுவனம் அந்த வாகனத்தை பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், குறிப்பிட்டத் தொகையை செலுத்தினால் வாகனத்தைத் தருவதாகக் கூறினராம். இதையடுத்து வீட்டை அடமானம் வைத்து அந்த நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியபோது, வேறு பெயரில் தான் கடன் வழங்க முடியும் என்று நிதி நிறுவனத்தினா் கூறிவிட்டனராம். இதனால், மன உளைச்சலுக்கு ஆளான கலையரசன் வெள்ளிக்கிழமை இரவு விஷம் குடித்து மயங்கிக் கிடந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவா்கள் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மனைவி மாலதி அளித்த புகாரின் பேரில், காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கட்கபுரீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT